தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
ஆல்குர்இன் 39:53
அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். ஆல்குர்இன் 3:135
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ் வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். ஆல்குர்இன் 4:48
உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான்'' என்று கூறினேன். ஆல்குர்இன் 71:10
யாரேனும் தீமையைச் செய்து, அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார். ஆல்குர்இன் 4:110
பாங்கு சப்தத்தைக் கேட்கும் போது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை கேட்கக்கூடியவர் (அறிவிப்பு முடிந்த பின்பு) அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ‚ வஹ்தஹ‚ லாஷரீக்க லஹ‚ வஅன்ன முஹம்மதன் அப்துஹ‚ வரசூலுஹ‚ ரளீத்து பில்லாஹி ரப்பன் வபில் இஸ்லாமி தீனன் என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
(பொருள் : அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நான் உறுதிகூறுகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டேன்)
அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல் : முஸ்லிம் 630
ஊளூச் செய்தல்
ஒருவர் முறையாக அங்கத் தூய்மை செய்யும் போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில் அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) நூல் : முஸ்லிம் 413
ஒந்து நேரத் தொழுகை
உங்களில் ஒருவரது வீட்டு வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அ(வ்வாறு நீராடுவ)து அவரது (மேனியிலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்க விடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்? என்று கேட்டார்கள். அவரது (மேனியிலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்கவிடாது என்று மக்கள் பதிலளித்தார்கள். இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும். இ(வற்றை நிறைவேற்றுவ)தன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 528
தொழுகைக்காக செல்லுதல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தமது வீட்டில் அல்லது கடைத் தெருவில் தொழுவதை விட கூட்டாக (ஜமாஅ)த்தில் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு (சிறப்பு) கூடுதலாக்கப்படுகிறது. அதற்குக் காரணம் ஒரவர் அங்கசுத்தி (உளூ)ச் செய்து அந்த அங்க சுத்தியை செம்மையாகச் செய்து பின்னர் தொழுவதற்காகவே புறப்பட்டு பள்ளி வாசலை நோக்கிச் செல்வாரானால் அவர் ஒவ்வோர் எட்டு எடுத்து வைக்கும் போதும் அதற்காக அவருக்கு அல்லாஹ் ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். அதற்காக அவரது பாவமொன்றை அவன் மன்னிக்கிறான். அவர் தொழுதால் வானவர்கள் அவருக்காக அவர் தம் தொழுத இடத்தில் இருக்கும் வரை (அருள் வேண்டி) பிரார்த்தித்துக்கொண்டே இருக்கின்றனர். இறைவா இவர் மீது அருள் புரிவாயாக இறைவா இவர் மீது இரக்கம் காட்டுவாயாக என்று கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வரை தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுகிறார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 647
ஜும்ஆ தொழுதல்
ஐவேளைத் தொழுகைகள் ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமலானிலிருந்து மறு ரமலான் ஆகியன இவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பொரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 396
ஈரவு தொழுகைக்கா ஏழுந்திருத்தல், பாவமன்னிப்புத் தேடுதல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சுபிட்சமும் உயர்வும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவிலும் பூமியின் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றிலொரு பகுதி நீடிக்கும் போது என்னிடம் யாரேனும் பிரர்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் அங்கீகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்க நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கேட்டால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 1145
நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல்
ஒரு மனிதன் தன் குடும்பத்தார், தனது சொத்தும் தனது பிள்ளைகள் ஆகியோரின் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும் போது தொழுகை நோன்பு தர்மம் நன்மை (புரியும்படி கட்டளையிட்டு) தீமை(யிலிருந்து தடுத்தல்) ஆகியன அதற்கான பரிகாரமாக அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி) நூல் : புகாரி 525
ஜும்ஆவுக்கு குளித்தல், நறுமணம் பூசுதல், தொழுதல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜுமுஆ நாளில் ஒருவர் குளிக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள் மேற்கொள்கிறார். பிறகு எண்ணெயோ நறுமணமோ பூசிக் கொள்கிறார். பிறகு அவர் புறப்பட்டு (சேர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்காமல் (பள்ளிக்குள் சென்று) தமக்கு விதியாக்கப்பட்டதைத் தொழுகிறார். பின்னர் இமாம் வந்ததும் (அவர் ஆற்றும் உரையைச் செவியேற்க) மௌனம் காக்கிறார். எனில் அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையில் ஏற்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர் : சல்மான் ஃபார்சீ நூல் : புகாரி 910
ரமலான் இரவுத் தொழுகை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமலான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 35
ரமலான் நோன்பு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 38
லைலத்துல் கத்ர்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எவர் லைலத்துல் கத்ர் இரவில் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. யார் ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 1901
சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றி) புகழ்ந்து துதிக்கினறேன்) என்று ஒரு நாளில் நுறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப்பட்டு விடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 6405
இஷøரா நோன்பு
அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, "முந்தைய ஓராண்டிற்கும் பிந்தைய ஓராண்டிற்கும் அது பாவப்பரிகாரமாக அமையும்'' என்றார்கள். ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு "அது கடந்த ஆண்டின் பாவப் பரிகாரமாகும்'' என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூகத்தாதா (ரலி) நூல் : முஸ்லிம் 2152
ஊம்ரா செய்வது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். பாவம்கலவாத ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலிலியில்லை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலி) நூல் : புகாரி 1773

No comments:
Post a Comment