Wednesday, May 20, 2015

யார் ஈவர்? - ஹதைஃபா பின் அல்யமான் (ரலி)

1 நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மைகளைப் பற்றி வினவிய போது தீமையில் இருந்து தப்பிக்கொள்ள தீமையைப் பற்றி வினவியவர்
2 உஹதுப் போரில் இவர்களின் முன்னிலையிலேயே இவர்களின் தந்தை கொல்லப்பட்டார்கள்.
3 உஸ்மான் (ரலி) அவர்களிடம் அல்குர்ஆனை மக்கள் பலவாறாக ஒதுகின்றனர். இதற்கு மாற்று வழி காணுவது பற்றி முறையிட்டவர்.
4 நபியவர்களின் மரணத்துக்கு பிறகு நடக்க இருக்கிற சோதனைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தவர்.
5 நபியவர்களின் இரகசியத்தோழர்.
6. பத்ருப் போரில் இவர்கள் கலந்த கொள்ளவில்லை.
7. அகழ்ப் போர் இரவில் கடுமையான காற்றும் குளிருடன் நபிகளாருடன் இருந்தவர்கள்.
8 உமர் (ரலி) அவர்கள் இவரையும் சவாதுல் இராக் பகுதிக்கு பொறுப்பாளராக நியமித்தார்கள்.
9. உக்பா (ரலி) அவர்கள் தஜ்ஜால் தொடர்பான நபிமொழியை இவர்களிடம் கேட்டுள்ளார்கள்.
10. கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் என்ற நபிமொழியை அறிவித்தவர். 
விடை
ஹதைஃபா பின் அல்யமான் (ரலி)
1 ஆதாரம் புகாரி (3606) 2 ஆதாரம் புகாரி (3290)
3 ஆதாரம் புகாரி (4987) 4 ஆதாரம் புகாரி (525)
5 ஆதாரம் புகாரி (6278) 6 ஆதாரம் முஸ்ம் (3661)
7 ஆதாரம் முஸ்லிம் (3662) 8 ஆதாரம் புகாரி (3700)
9 ஆதாரம் முஸ்லிம்(45626)  10 ஆதாரம் முஸ்லிம்

No comments:

Post a Comment