மூஸா (அலை) அவர்கள் பிர்அவ்னிடம் செல்ல முன்னர் அல்லாஹ்விடம் எப்படிப் பிராத்தித்தார்கள்?
ஹாரூனை தூதராக அனுப்புவாயாக என்றார்கள் (அல்குர்ஆன் 26:13)
எந்த யுத்தத்தின் போது ஆயிஷா (ரலி) அவர்கள் நபியவர்களுடன் சென்றார்கள்?
பனூமுஸ்தலக் யுத்தத்தின் போது ஆதாரம் புகாரி (4141)
மூஸா (அலை) அவர்கள் எந்த அற்புதத்தை வெளிப்படுத்தினார்கள் ?
தனது கைத்தடியையும் கையையும் வெளிப்படுத்தினார்கள் (அல்குர்ஆன் 26:32.33)
நபியவர்கள் யுத்தத்துக்குக் போகும் போது தம் மனைவியரை எப்படித் தேர்வு செய்வார்கள்?
சீட்டுக் குலுக்கி போடுவதின் மூலம் தேர்வு செய்வார்கள் ஆதாரம் புகாரி (4141)
சூனியக்காரர்கள் பிர்அவ்னிடம் வந்த போது என்ன கூறினார்கள்?
நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்கு பரிசு உண்டா என வினவினர்? (அல்குர்ஆன்26:41)
ஆயிஷா (ரலி) அவர்களின் அணிந்திருந்த மாலை எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது?
ழஃபாரி நகர முத்து மாலை ஆதாரம் புகாரி (4141)
சூனியக்காரர்கள் பிர்அவ்னிடம் கேட்ட கேள்விக்கு பிர்அவ்ன் என்ன பதில் கூறினான்?
ஆம் நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாக ஆவீர்கள் (அல்குர்ஆன் 26:42)
ஆயிஷா (ரலி) அவர்களை கண்டு முஸ்தலிக் போரில் தம் வாகனத்தின் மீது ஏற்றி வந்த நபித் தோழர் யார்
ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸ‚லமி அவர்கள் ஆதாரம் புகாரி (4141)
சூனியக்காரர்கள் தோல்வியுற்ற போது என்ன செய்தார்கள் ?
அல்லாஹ்வுக்கு சிரம்பணிந்தார்கள் (அல்குர்ஆன் 26:46)
ஆயிஷா (ரலி) அவர்கள் மீது சுமத்திய அவதூறைப் பற்றி நல்லண்ணத்தை வெளிப்படுத்திய நபித்தோழர் யார்
உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் ஆதாரம் புகாரி(4141)
பிர்அவ்ன், நம்பிக்கை கொண்ட சூனியாக்காரர்களைப் பார்த்து என்ன சொன்னன் ?
கவலையில்லை நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்பவர்கள் என்று கூறினார்கள் (அல்குர்ஆன் 26:50)
அயிஷா (ரலி) அவர்களின் பணிப் பெண்ணின் பெயர் என்ன
பரீரா (ரலி) அவர்கள் ஆதாரம் புகாரி (4141)
பிர்அவ்னின் படைகள், கடலை நெருங்கிய போது மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தைப் பார்த்து என்ன சொன்னார்கள்?
என்னுடன் என் இறைவன் இருக்கின்றான் அவன் எனக்கு வழி காட்டுவான் என்றார்கள் (அல்குர்ஆன் 26:62)
அயிஷா (ரலி) அவர்கள் பற்றிய அவதூறில் யாரை தண்டிப்பதற்கு நபியவர்கள் தம் தோழர்களிடம் உதவி வேண்டினார்கள்
அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூலை தண்டிப்பதற்கு ஆதாரம் புகாரி (4141)
எதனைக் கொண்டு கடலில் அடிக்கும் படி அல்லாஹ் மூஸா (அலை) நபிக்கு கட்டளையிட்டான்?
அவரின் கைத்தடியால் கடலில் அடிக்கும் படி கட்டளையிட்டான் (அல்குர்ஆன் 26:63)
கஸ்ரஜ் குலத்தாரின் தலைவரின் பெயர் என்ன?
சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் ஆதாரம் புகாரி (4141)
நூஹ் நபியின் சமுதாயத்தவர்கள் அவர்கள் பிரச்சாரத்தை விடவில்லையானால் என்ன செய்வதாக எச்சரித்தார்கள்?
கல்லால் எறிந்து கொல்லப்படுவீர் என்று எச்சரித்தனர் (அல்குர்ஆன் 26:116)
ஆயிஷா (ரலி) அவர்கள், தம்மீது சுமத்தப்பட்ட அவதூறின் போது எந்த இறைத்தூதரை உவமையாக கருதினார்கள்?
யூசுஃப் நபியின் தந்தையான யஃகூப் (அலை) அவர்களை உவமையாக கருதினார்கள் ஆதாரம் புகாரி (4141)
உயரமான இடங்களில் நூஹ் நபியின் சமுதாய மக்கள் எதனை எழுப்பினார்கள் ?
வீணான சின்னங்களை எழுப்பக்கூடியவர்களாக இருந்தார்கள் (அல்குர்ஆன் 26:128)
ஆயிஷா (ரலி) அவர்களின் மீது குற்றம் சுமத்திய அபூபக்ர் (ரலி) அவர்களின் உறவினர் யார்?
மிஸ்தாஹ் (ரலி) அவர்கள் ஆதாரம் புகாரி (4141)
அவர்கள் நிரந்தரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு எவைகளை எழுப்பினார்கள்?
வலிமையாக கட்டிடங்களை உருவாக்கக்கூடியவர்களாக இருந்தார்கள் (அல்குர்ஆன் 26:129)
ஆயிஷா (ரலி) அவர்களுக்கு போட்டிய இருந்த நபியவர்களின் இன்னொரு மனைவியின் பெயர் என்ன?
ஸைனப் பின்தி ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் ஆதாரம் புகாரி (4141)
ஆதுக் கூட்டத்தார் மலைகளில் எதை அமைத்தார்கள்?
மலைகளில் வீடுகளை (அல்குர்ஆன் 26:149)
எதிரிகளுக்கு நபிகளார் சார்பாக கவிதையில் பதிலடி தருபவர் யார்?
ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) ஆதாரம் :புகாரி (4145)
ஸமூது குட்டத்தார்கள் அல்லாஹ்விடம் எந்த அத்தாட்சியை வேண்டினார்கள்
பெண் ஒட்டகத்தை வேண்டினார்கள் (அல்குர்ஆன் 26:155)
கற்பொழுக்கம் மிக்கவர்கள்; கண்ணியம் நிறைந்தவர்கள்; எந்த சந்தேகத்தின் பேரிலும் குற்றம்சாட்டப்பட இயலாதவர்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களைப்பற்றி கவிதை பாடியவர்கள் யார்?
ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) ஆதாரம் :புகாரி (4146)
பெண் ஒட்டகத்தை அறுத்த போது அவர்களுக்கு என்ன நடந்தது ?
உடனே அவர்களுக்கு வேதனை பீடித்துக் கொண்டது (அல்குர்ஆன் 26:158)
இந்த நட்சத்திரத்தினால் தான் எங்களுக்கு மழை பொழிந்தது' எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து நட்சத்திரத்தை விசுவாசித்தவர்களாவர்' என்ற இறைவனின் கூற்றை நபிகளார் எப்போது கூறினார்கள்?
பத்ர் போரின் போது ஆதாரம் : புகாரி (4147)
லூத் நபியவர்களை அவர்களின் சமுதாயம் எப்படி எச்சரித்தார்கள் ?
நீர் இதிலிருந்து விலகிக் கொள்ளவிடில் நீர் வேளியேற்றப்படுவோரில் நீரும் ஒருவராவீர் என்று எச்சரித்தனர் (அல்குர்ஆன் 26:167)
ஹுதைப்பியா ஆண்டில் நபிகளார் உம்ரா செய்த மாதம் எது?
துல்கஅதா ஆதாரம் : புகாரி 4148
லூத் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் எப்படி பிராத்தித்தார்கள் ?
என் இறைவா என்னையும் என் குடும்பத்தவர்களையும் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டும் காப்பாற்றுவாயாக (அல்குர்ஆன் 26:169)
ஆண்டில் இஹ்ராம் ஆடையணியாமல் இருந்த நபித்தோழர் யார்?
அபூகதாதா (ரலி) ஆதாரம் புகாரி 4149
No comments:
Post a Comment