Wednesday, May 20, 2015

திருக்குர்ஆன் நபிமொழி கேள்வி பதில் அக்டோபர் 2009

 கேள்வி : உமர் (ரலி) அவர்கள் மீதமான தரமான கீழாடையை யாருக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்கள்?
பதில் : உம்மு ஸலீத் (ரலி) (ஆதாரம்: புகாரி 2881)

கேள்வி : மரங்கள் எப்படி கனிகளைத் தருகிறது?
பதில் : இறைவனின் விருப்படி (அல்குர்ஆன் 14:25)

கேள்வி : போர்களத்தில் பெண்கள் ஆற்றிய பங்கு என்ன?
பதில் : காயமடைந்தவர்களுக்கு மருந்திடல்இறந்தவர்களை ஊருக்குக் கொண்டு செல்லுதல் (ஆதாரம் :புகாரி 2882)

கேள்வி : தீய கொள்கைக்கு உதாரணம் என்ன?
பதில் : கெட்ட மரம். அது பூமியின் மேற்புறத்திலிருந்து பிடுங்கப்பட்டுள்ளதுஅது நிற்காது (அல்குர்ஆன் 14:26)

கேள்வி : போர்களத்தில் அம்பு தாக்கிய எந்த நபருக்காக நபிகளார் பிரார்த்தனை செய்தார்கள்?
பதில் : உபைத் அபூஆமிர் (ரலி) (ஆதாரம் :புகாரி 2884)

கேள்வி : தர்மங்களை எப்படி வழங்கலாம்?
பதில் : இரகசியமாகவும் வெளிப்படையாகவும் வழங்கலாம் (அல்குர்ஆன் 14:31)

கேள்வி : அனஸ் (ரலி) அவர்களுக்கு பணிவிடை செய்த மூத்த நபித்தோழர் யார்?
பதில் : ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) (ஆதாரம் :புகாரி 2888)

கேள்வி : அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிவிட முடியுமா?
பதில் : முடியாது (அல்குர்ஆன் 14:34)

கேள்வி : கைபர் போரில் நபிகளாருக்கு கிடைத்த மனைவியின் பெயர் என்ன?
பதில் : ஸஃபிய்யா (ரலி) (ஆதாரம் :புகாரி 2893)

கேள்வி : மக்காவை அபய பூமியாக ஆக்க என்று பிரார்த்தனை செய்தவர் யார்?
பதில் : நபி இப்ராஹீம் (அலை) (அல்குர்ஆன் 14:35)

கேள்வி : ஸஃபிய்யா (ரலி) அவர்களின் வலீமா விருந்தாக என்ன கொடுக்கப்பட்டது?
பதில் : பேரீச்சம் பழம்நெய்பாலாடை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட "ஹைஸ்எனும் உணவு (ஆதாரம் :புகாரி 2893)

கேள்வி: இஸ்மாயீல் (அலை)இஸ்ஹாக் (அலை) ஆகியோரை எப்போது நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கினான்?
பதில் : இப்ராஹீம் நபி முதுமை நிலையை அடைந்த போது (அல்குர்ஆன் 14:39)

கேள்வி : யாரால் உதவி நமக்கு கிடைக்கிறது?
பதில் : பலவீனர்களின் பொருட்டால்தான் (ஆதாரம் :புகாரி 2896)

கேள்வி: மறுமைநாளில் குற்றவாளிகள் எப்படி இருப்பார்கள்?
பதில் : பார்வைகள் நிலை குத்தி நிற்கும் ,தலைகளை உயர்த்தியோராக தறிகெட்டு ஓடுவார்கள்(அல்குர்ஆன் 14:42)

கேள்வி : அம்பெய்வதில் தேர்ச்சி பெற்ற நபி யார்?
பதில் : நபி இஸ்மாயீல் (அலை) (ஆதாரம: புகாரி 2899)

கேள்வி : மறுமை வரும் போது தீயவர்கள் எதற்காக அவகாசம் கேட்பார்கள்?
பதில் : உனது அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம். தூதர்களைப் பின்பற்றுகிறோம் என்பதற்காக!(அல்குர்ஆன் 14:44)

கேள்வி : எந்த நபித்தோழரின் கேடயத்தால் நபிகளார் தற்காத்துக் கொள்வார்கள்?
பதில் : அபூதல்ஹா (ரலி) (ஆதாரம: புகாரி 2902)

கேள்வி : தீயவர்களின் சூழ்ச்சி எவ்வாறு இருந்தது?
பதில் : அவர்களின் சூழ்ச்சி மலைகளைப் புரட்டக் கூடியதாக இருந்தது. (அல்குர்ஆன் 14:46)

கேள்வி : நபிகளார் இறக்கும் போது அவர்களிடம் இருந்த வாகனம் எது?
பதில் : வெள்ளை நிற கோவேறுக் கழுதை (ஆதாரம் : புகாரி 2912)

கேள்வி: மறுமை நாளில் வானம் பூமி என்னவாகும்?
பதில் : பூமிவேறு பூமியாகவும்வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும்.(அல்குர்ஆன் 14:48)

கேள்வி : நபிகளாரின் போர் கவசம் எந்த பொருளுக்காக அடைமானம் வைக்கப்பட்டது?
பதில் : முப்பது ஸாவுகள் வாற்கோதுமைக்குப் பகரமாக ஒரு யூதரிடம் அடகு வைக்கப்பட்டது (ஆதாரம் :புகாரி 2916)

கேள்வி : மறுமை நாளில் குற்றவாளிகள் எதனால் கட்டப்பட்டிருப்பார்கள்?
பதில் : சங்கிலியால் (அல்குர்ஆன் 14:49)

கேள்வி : சிரங்கின் காரணத்தால் பட்டாடை அணிய அனுமதிக்கப்பட்டவர்கள் யார்?
பதில் : அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்ஸுபைர் (ரலி) (ஆதாரம் : புகாரி 2919)

கேள்வி : நரகவாதிகளின் சட்டை எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்?
பதில் : தாரால் (அல்குர்ஆன் 14:50)

கேள்வி : ஆட்டுக் கறியை உண்டால் உளூச் செய்ய வேண்டுமா?
பதில் : தேவையில்லை (ஆதாரம: புகாரி 2923)

கேள்வி : நரகவாதிகளின் முகங்களை எது மூடும்?
பதில் : நெருப்பு (அல்குர்ஆன் 14:50)

கேள்வி : உம்மு ஹராம் (ரலி) அவர்களின் கணவர் பெயர் என்ன?
பதில் : உபாதா பின் ஸாமித் (ரலி) (ஆதாரம் :புகாரி 2924)

2 comments: