Thursday, July 23, 2015

74:1 மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!

74:1 மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!
يا أَيُّهَا الْمُدَّثِّرُ قُمْ فَأَنْذِرْ وَرَبَّكَ فَكَبِّرْ وَثِيَابَكَ فَطَهِّرْ وَالرُّجْزَ فَاهْجُرْ
‘போர்வை போர்த்தியவரே! எழுவீராக! (சென்று மக்களுக்கு) எச்சரிக்கை செய்வீராக!, உமது இறைவனைப் பெருமைப் படுத்துவீராக, உமது ஆடைகளைத் தூய்மைப் படுத்துவீராக, அசுத்தங்களை விட்டு ஒதுங்கி விடுவீராக!’ (அல்குர்ஆன் 74:1-5)

விளக்கம்: இந்த திருக்குர்ஆன் வசனங்கள் இறக்கப்பட்டதற்கான காரணத்தை நபி (ஸல்) அவர்கள் கீழ் கண்டவாறு விளக்குகிறார்கள்.

4 قال بن شِهَابٍ وَأَخْبَرَنِي أبو سَلَمَةَ بن عبد الرحمن أَنَّ جَابِرَ بن عبد اللَّهِ الْأَنْصَارِيَّ قال وهو يحدث عن فَتْرَةِ الْوَحْيِ فقال في حَدِيثِهِ بَيْنَا أنا أَمْشِي إِذْ سمعت صَوْتًا من السَّمَاءِ فَرَفَعْتُ بَصَرِي فإذا الْمَلَكُ الذي جَاءَنِي بِحِرَاءٍ جَالِسٌ على كُرْسِيٍّ بين السَّمَاءِ وَالْأَرْضِ فَرُعِبْتُ منه فَرَجَعْتُ فقلت زَمِّلُونِي زَمِّلُونِي فَأَنْزَلَ الله تَعَالَى ) يا أَيُّهَا الْمُدَّثِّرُ قُمْ فَأَنْذِرْ ( إلى قَوْلِهِ ) وَالرُّجْزَ فَاهْجُرْ ( فَحَمِيَ الْوَحْيُ وَتَتَابَعَ تَابَعَهُ عبد اللَّهِ بن يُوسُفَ وأبو صَالِحٍ وَتَابَعَهُ هِلَالُ بن رَدَّادٍ عن الزُّهْرِيِّ وقال يُونُسُ وَمَعْمَرٌ بَوَادِرُهُ
‘நான் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என் பார்வையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது (அன்று) ஹிரா மலையில் என்னிடம் வந்த அதே வானவர் வானுக்கும் பூமிக்கும் இடையே ஒரு ஆசனத்தில் அமர்ந்திருக்கக் கண்டு திடுக்கிட்டவனாக (வீட்டிற்குத்) திரும்பி வந்து, ‘என்னைப் போர்த்துங்கள்! என்னைப் போர்த்துங்கள்!’ என்றேன். அப்போது தான்,

‘போர்வை போர்த்தியவரே! எழுவீராக! (சென்று மக்களுக்கு) எச்சரிக்கை செய்வீராக!’ (74:1) என்ற திருக்குர்ஆன் வசனங்களை ‘அசுத்தங்களை விட்டு ஒதுங்கி விடுவீராக!’ என்பது வரை இறைவன் அருளினான். அதன் பின் வஹீ அடிக்கடி தொடர்ந்து வரத் தலைப்பட்டு விட்டது’ என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: புகாரி 4.

No comments:

Post a Comment