”ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இரண்டு கீராத்கள் என்றால் என்ன?’ என வினவப்பட்டது. அதற்கவர்கள், ‘இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்றார்கள். - புஹாரி:1325 அபூஹூரைரா (ரலி)
ஜனாஸாவைப் பின்தொடர்கிறவருக்கு ஒரு கிராத் நன்மையுண்டு என அபூஹுரைரா (ரலி) கூறினார் என இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கூறப்பட்டதும் ‘அபூஹுரைரா (ரலி) மிகைப்படுத்துகிறார்’ என்றார். ஆயிஷா (ரலி) அபூஹுரைரா (ரலி)வின் கூற்றை உண்மைப்படுத்தியதுடன், ‘நானும் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறக் கேட்டிருக்கிறேன்’ என்றும் கூறினார். இதைக் கேட்ட இப்னு உமர் (ரலி) ‘அப்படியாயின் நாம் அதிகமான கீராத்களைப் பாழ்படுத்தி விட்டோமே’ என்றார். - புஹாரி :1324 நாபிஃ (ரலி)
No comments:
Post a Comment