Monday, February 13, 2017

யார் இவர்? - உபை பின் கஅப் (ரலி)


1. நபி (ஸல்) அவர்கள் இந்த நபித்தோழரிடம் திருக்குர்ஆனை ஓதிக்காட்டுமாறு கேட்டார்கள்.
2. இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம்
மிகவும் மகத்தானது என்று தெரியுமா?'' என நபி (ஸல்) அவர்கள் இவரிடம்  கேட்டார்கள்
3.வீட்டுக்குள் நுழைவதற்கு மூன்று முறை அனுமதி  கேட்டு நபி வழியை நடைமுறைப்படுத்தியவர்.
4. அபூதல்ஹா (ரலி) அவர்கள் பைருஹா தோட்டத்தின் ஒரு பங்கை இவருக்குக் கொடுத்தார்கள்.
5. அகழ்ப்போரின் போது இவர்களின்  நாடி நரம்பில் அம்பு பாய்ந்துவிட்டது
6. நபி (ஸல்) அவர்களுடன் இப்னு ஸய்யாத் என்பவனை இவர்கள் சந்தித்தார்கள்.
7. இவர்கள் மது அருந்திய கொண்டிருந்த நேரத்தில்தான் மது தடைசெய்யப்பட்டது.
8. கண்டடுக்கப்பட்ட பொருளுக்கு என்ன சட்டம் என்பதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் இவருக்கு கற்றுக் கொடுத்தார்கள்.
9. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் பர்தாவின் சட்டத்தைப் பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டவர்.
10. உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில்  இரவுத் தொழுகைக்கு இவரின் தலைமையில் கீழ் மக்கள் தொழும்படி ஏற்பாடு செய்தார்கள்.

விடை : உபை பின் கஅப் (ரலி) அவர்கள்
1 ஆதாரம் முஸ்லிம் (1463)                       
2 ஆதாரம் முஸ்லிம்  (1476)
3 ஆதாரம் முஸ்லிம் (4355)                       
4 ஆதாரம் புகாரி (2758)
5 ஆதாரம் முஸ்லிம்  (4437)                    
6 ஆதாரம் புகாரி (1354)
7 ஆதாரம் முஸ்லிம் (4012)                       
8 ஆதாரம் புகாரி (2426)
9 ஆதாரம் முஸ்லிம் (2802)                       

10 ஆதாரம் புகாரி (2010)