Thursday, May 21, 2015

யார் ஈவர்? - ஸஅத் பின் உபாதா (ரலி)

1 நபி (ஸல்) அவர்களின் மகளான ஸைனப் (ரலி-) அவர்களின் குழந்தை இறந்த போது நபியவர்களுடன் கலந்து கொண்டவர்.
2 இவர் நோய் வாய்ப்பட்ட போது நபி (ஸல்)அவர்கள் சில நபித் தோழர்களுடன் இவரை நோய் விசாரிக்க வருகை தந்தார்கள்.
3 இவர் மதீனா வாசிகளான கஸ்ரஜ் கோத்திரத்தாரின் தலைவராவார்.
4 நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அன்ஸாரிகள் இவரையும் தலைவராக்குவதற்கு பனூ ஸாயிதா கூடத்தில் ஒன்று கூடினார்கள்.  5 இவரின் தாயார் இறந்தபோது அவர் சார்பாக ஏதாவது தர்மம் கொடுக்கலாமாஎன்று நபியர்வர்களிடம் கேட்டவர்
6 இவருடைய தாயார் இறந்த போது மிஹ்ராப் என்ற தோட்டத்தை தாயாருக்காக வேண்டி தர்மம் செய்தவர்.
7 மக்கா வெற்றியின் போது அன்சாரிகளின் கொடி இவர்களிடம் இருந்தது.
 8 அப்துல்லாஹ் பின் உபை மன்னிக்குமாறு நபிகளாரிடம் பரிந்துரை செய்தவர்.
9 நபியர்கள் இவருடைய ரோசத்தை கண்ட போது அவரைவிட நான் ரோஷக்காரன்,அல்லாஹ் என்னைவிடவும் ரோஷக்காரன் என்று சொன்னார்கள்.
10 நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் (அவர்களது அவையில்) ஆட்சித் தலைவருக்கு ஒரு காவல்துறை அதிகாரியைப் போன்று செயல்பட்டுவந்தார்கள்.

விடை
ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள்
1 ஆதாரம் புகாரி  1284                
2 ஆதாரம் புகாரி   1304
3 ஆதாரம் புகாரி  4141                
4  ஆதாரம் புகாரி   3668
5 ஆதாரம் புகாரி  2756                
6 ஆதாரம் புகாரி   2762
7 ஆதாரம் புகாரி  4280                
8 ஆதாரம் புகாரி 4566
9 ஆதாரம் புகாரி 6846           
10 ஆதாரம் புகாரி 7155

யார் இவர்? - அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)

1 தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இனிய குரல் இவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.
2 இவர்களுடைய மகனுக்கு நபிகளார் இப்ராஹீம் என்று பெயர் சூட்டினார்கள்.
3 இவர்கள் என்னைச் சார்ந்தவர்கள், நான் அவர்களைச் சார்ந்தவன் என இவர்களின் குலத்தை குறிப்பிட்டு நபிகளார் கூறினார்கள்
4 இவருடைய குலத்தவர்கள் தங்களிடம்  உணவு குறைந்து விட்டால் அனைவரும் தங்களிடம் எஞ்சி இருப்பதை ஒரு துணியில் சேகரித்து தங்களுக்குள் சமமாக பங்கிட்டுக் கொள்வார்கள்.
5 நபி (ஸல்) அவர்கள் இருந்த இடத்திற்கு இரவுத் தொழுகைக்கு முறை வைத்துச் செல்லக்கூடியவர்களில் ஒருவராக  இவர்கள் இருந்தார்கள்.
6 முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் இவர்களையம் யமன் நாட்டிற்கு நபிகளார் அனுப்பி வைத்தார்கள்.
7 இவர் நபி (ஸல்) அவர்களை இவர்களும், இவருடன் இருவரும் சந்திக்கச் சென்றபோது அவரோடு இருந்த ஒருவர் பதவி  கேட்டார். அப்போது நபியவர்கள் பதவி கேட்போருக்கு நாங்கள் பதவி கொடுக்கமாட்டோம் என்றார்கள்.
8 இவரிடம்  நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்ய நாடியுள்ளீரா? எனக் கேட்டார்கள்.
 9 ஒரு இடத்திற்கு சென்று மூன்று முறை அனுமதி கேட்டு பதில் வரவில்லையானால் அங்கிருந்து திரும்பிவிட வேண்டும் என்ற நபிமொழியை உமர் (ரலி) அவர்களுக்கு உணர்த்தியவர்
  10 நபியவர்கள் எப்படி பல் துலக்குவார்கள் என்ற செய்தியை அறிவித்தவர்.

விடை
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள்
1 ஆதாரம் புகாரி 5048                           
2 ஆதாரம் புகாரி:5467
3 ஆதாரம் புகாரி 2486                           
4 ஆதாரம் புகாரி:2486
5 ஆதாரம் புகாரி 567                              
6 ஆதாரம் புகாரி4341
7 ஆதாரம் புகாரி 2261                           
8 ஆதாரம் புகாரி 1795
9 ஆதாரம் புகாரி  2062          
10 ஆதாரம் புகாரி 244

யார் இவர்? - ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

1.   இவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பிறகு ஏழு நாள்வரை வேறு எவரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை.
2.  அல்லாஹ்வின் பாதையில் அம்பெய்த அரபுகல் நானே முதலாமவன் ஆவேன் என்று கூறியவர்.
3.   இவர் சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட ஒருவர்.
4.    நபி (ஸல்) அவர்கள் மதீனா சென்றபோது அவர்களை இரவில் காவல் காத்தவர்.
5.   நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரின்போது தம் தாய் தந்தை இருவரையும் சேர்த்து இவருக்கு அர்ப்பணிப்ப தாக  சொன்னார்கள்.
6. உஹுதுப் போரில் முஸ்லிம்கள் சிதறி ஓடியபோது நபி களாருக்கு பக்க பலமாக இருந்த இருவரில் ஒருவர். 7. இவரை குணப்படுத்துஇவரின் ஹிஜ்ரத்தை முழுமைப் படுத்து என்று நபி (ஸல்) அவர்கள் பிராத்தித்தார்கள். 8.            தம் சொத்தில் பாதியை தர்மம் செய்ய முன்வந்தவர்.
9.    இவரின் தொழுகை விஷயமாக மக்கள் உமர் (ரலி) அவர்களிடம் முறையிட்டு இருக்கிறார்கள்.
10.   இவருக்கு ஸஅது பின் மாலிக் என்று மற்றொரு பெயரும் உண்டு.

விடை: 
ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
ஆதாரம் : 1. புகாரி (3727), 2.  புகாரி (3728), 3. அஹ்மத் (1585)
4. புகாரி (2885), 5. புகாரி (3725), 6. புகாரி (3723), 7. புகாரி (5659),
8. புகாரி (5659), 9. முஸ்லிம் (775), 10. புகாரி (4059)

திருக்குர்ஆன் கேள்வி பதில் பிப்ரவரி 2010

கேள்வி : மறுமை நாளில் கடவுளாக இட்டுக்கட்டி வணங்கியவைகள் என்னவாகும்?
பதில் : அவர்களை விட்டும் மறைந்துவிடும் (அல்குர்ஆன் 16:87)

கேள்வி : கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபிகளார் கொடுத்தார்கள்?
பதில் : அலீ (ரலி) (ஆதாரம் : புகாரி 3009)

கேள்வி : வேதனைக்கு மேல் வேதனை பெறுவோர் யார்?
பதில் : அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர்குழப்பம் செய்தோர். (அல்குர்ஆன்16:88)

கேள்வி : அல்லாஹ் யாரைப் பார்த்து வியப்படைவான்?
பதில் : சங்கிகளால் பிணைக்கப்பட்டவர்களாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டத்தாரைப் பார்த்து (ஆதாரம் : புகாரி 3010)

கேள்வி : மறுமைநாளில் யாரை எதிரான சாட்சியாக அல்லாஹ் ஆக்குவான்?
பதில் : ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிரான சாட்சியை ஆக்குவான் (அல்குர்ஆன் 16:89)

கேள்வி : அடிமைப் பெண்ணுக்கு அழகிய முறையில் கல்வியும் ஒழுக்கும் கற்பித்து,அவளையே திருமணம் செய்து கொண்டவருக்கு கிடைக்கும் கூலி எவ்வளவு?
பதில் : இரண்டு தடவை கூலி வழங்கப்படும் (ஆதாரம் :புகாரி 3011)

கேள்வி : அல்லாஹ் தடுத்தவை எவை?
பதில் : வெட்கக்கேடானவைதீமைமற்றும் வரம்பு மீறுதல் (அல்குர்ஆன் 16:90)

கேள்வி : போர் களத்தில் யாரைக் கொல்லக்கூடாது?
பதில் : பெண்களையும் குழந்தைகளையும் (ஆதாரம்:புகாரி 3015)

கேள்வி : மோசடி செய்தவற்காக சத்தியம் செய்தால் என்ன ஏற்படும்?
பதில் : உறுதிப்பட்ட பாதம் சறுகிப்போய்விடும் (அல்குர்ஆன் 16:94)

கேள்வி : நெருப்பால் தண்டனை கொடுக்க தகுதியானவன் யார்?
பதில் : அல்லாஹ் மட்டுமே (ஆதாரம் : புகாரி 3016)

கேள்வி : அல்லாஹ்வின் பாதையில் செல்வதை தடுத்தால் என்ன ஏற்படும்?
பதில் : தீங்கும் கடும் தண்டனையும் கிடைக்கும். (அல்குர்ஆன் 16:94)

கேள்வி : பத்ர் போரில் பிடிபட்ட அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபிகளார் யாருடை சட்டை அணிய கொடுத்தார்கள்?
பதில் : நயவஞ்சகனின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை (ஆதாரம் : புகாரி 3008)

கேள்வி : குர்ஆன் ஓதும்போது என்ன செய்ய வேண்டும்?
பதில் : விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும் (அல்குர்ஆன் 16:98)

கேள்வி : ஏமன் நாட்டு கஅபா என்று அழைக்கப்பட்ட ஆலயத்தின் பெயர் என்ன?
பதில் : துல் கலஸா (ஆதாரம் : புகாரி 3020)

கேள்வி : ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் எதிரிகள் என்ன கூறினார்கள்?
பதில் : நபி இட்டுக்கட்டி செல்கிறார் என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 16:101)

கேள்வி : ஏமன் நாட்டு கஅபா என்று அழைக்கப்பட்ட துல்கலஸா ஆலயத்தை உடைத்தவர் யார்?
பதில் : ஜரீர் (ரலி) (ஆதாரம் : புகாரி 3020)

கேள்வி : குர்ஆன் யார் மூலம் இறக்கப்பட்டது?
பதில் : இறைவனிடமிருந்து ரூஹுல் குதுஸ் எனும் (ஜிப்ரீல் மூலம்) (அல்குர்ஆன் 16:102)

கேள்வி : யூதனின் தலைவன் அபூ ராஃபிஉ என்பவனை கொன்றவர் யார்?
பதில் : அப்துல்லாஹ் பின் அதீக் (ரலி) (ஆதாரம் : புகாரி 3023)

கேள்வி : யாருக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்?
பதில் : அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதோருக்கு (அல்குர்ஆன் 16:104)

கேள்வி : போர்களத்தின் ஏற்படும் துன்பங்களை பார்க்கும்போது எப்படி இருக்க வேண்டும்?
பதில் : நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருக்கு வேண்டும். (ஆதாரம் :புகாரி 3026)

கேள்வி : அல்லாஹ்வை நம்பாதோர் என்ன செய்வார்கள்?
பதில் : பொய்யை இட்டுக்கட்டுவார்கள் (அல்குர்ஆன் 16:105)

கேள்வி : கொடியவன் கஅப் பின் அஷ்ரஃபை கொன்றவர் யார்?
பதில் : முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) (ஆதாரம் : புகாரி 3031)

கேள்வி : அல்லாஹ்வின் கோபமும் வேதனையும் யாருக்கு ஏற்படும்?
பதில் : அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும்மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் (அல்குர்ஆன் 16:106)

கேள்வி : மார்பில் அதிக முடியுடையவர்களா இருந்தவர்கள் யார்?
பதில் : நபி (ஸல்) அவர்கள் (ஆதாரம் :புகாரி 3034)

கேள்வி : பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் யாருக்கு அணிவித்தான்?
பதில் : பசியும் பயமும் இல்லாமல் இருந்து அல்லாஹ்வை மறந்தவர்களுக்கு (அல்குர்ஆன்16:112)

கேள்வி : முஆத் (ரலி) அவர்களை எந்த நாட்டு ஆளுநராக நபிகளார் நியமித்தார்கள்?
பதில் : ஏமன் (ஆதாரம் : புகாரி 3038)

கேள்வி : இறைவனை மட்டும் வணங்குவோர் என்ன செய்வார்கள்?
பதில் : அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துவார்கள் (அல்குர்ஆன் 16:114)