Wednesday, May 20, 2015

யார் இவர்? - முஆவியா பின் அபூ சுப்யான் (ரலி)

1. அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுப்பான் என்ற நபி மொழியை அறிவித்தவர்.
2 முஃகீரா பின் ஷஅபா (ரலி) அவர்கள் நபியவர்கள் தொழுது முடித்த பின் ஓதும் துஆவை இவர்களுக்கு எழுதி அனுப்பினார்கள்.
3 ஒட்டு முடியின் விபரீதத்தைப் பற்றி மதீனா வாழ் மக்களுக்கு அறிவுறுத்தியவர்.
4 உம்மு ஹராம் பின்தி மில்ஹான் (ரலி) அவர்கள் இவருடைய ஆட்சிக்காலத்தில் கடல் போர் வீராங்கனையாக கலந்து கொண்டார்கள்.   
5 இவருடைய தந்தை நபி (ஸல்) அவர்களிடம் தம் மகனை தங்களின் எழுத்தாளராக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
6 நபிகளாரின் மனைவி உம்மு ஹபீபா (ரலி) அவர்களின் சகோதரர் இவர்.  
7 பாங்கு சொல்லக்கூடியவருக்குரிய சிறப்பைப் பற்றி அறிவித்த நபித்தோழர்.  
8 நபியவர்களின் செய்திகளை வரையரையின்றி அறிவிப்பதைப் எச்சரித்தவர்கள். 
9 நபிகளார் காலத்தில் ஏழையாக இருந்தவர்
10 உமர் (ரலி)  இஸ்லாத்தை ஏற்றபோது இணைவைப்பாளராக இருந்த அவர்களின் மனைவியரில் ஒருவரை தலாக் விட்டார்கள். அவர்களிள் ஒருவரை இவர் திருமணம் முடித்திருந்தார். ஆதாரம்

விடை
முஆவியா பின் அபூ சுப்யான் (ரலி) அவர்கள்
1 ஆதாரம் : புகாரி (71)             
2 ஆதாரம் : புகாரி 6330
3 ஆதாரம் :புகாரி (3488)         
 4 ஆதாரம் : புகாரி (2788)
5 ஆதாரம் : முஸ்லிம் (4914)       
6 ஆதாரம் : முஸ்லிம் (4914)
7 ஆதாரம் : முஸ்லிம்(631)         
8 ஆதாரம்   முஸ்லிம் (1876)
9 ஆதாரம் : முஸ்லிம் 2965                
10 ஆதாரம் : புகாரி 2731

No comments:

Post a Comment