Tuesday, August 25, 2015

யார் இவர்? - உஸாமா பின் ஜைத் (ரலி)

1 நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவராக இருந்தார்
2 நபி (ஸல்) அவர்கள் இவரை ஒரு படைக்கு தளபதியாக நபிகளார் அனுப்பியுள்ளார்கள்.
3 இவருடைய தந்தையையும் ஒரு போருக்கு படைத்தளபதியாக நபியவர்கள்அனுப்பியிருந்தார்கள்.
4 மஹ்ஸமீ கோத்திரத்தில் ஒரு பெண் திருடியதால் அவருக்கு தண்டனையைக் குறைக்கஇவருடைய பரிந்துரை கேட்கப்பட்டது.
5  நபி (ஸல்) அவர்கள் இவரைக் தன் வாகனத்தின் பின்னால் ஏற்றிக்கொண்டு ஸஅத் பின்உபாதா (ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள்
6 நபியவர்கள் இவர் சிறுவராக இருக்கும் போது இவரை ஒரு தொடையிலும் ஹசன் (ரலி)அவர்களை மறு தொடையிலும் வைத்து "இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்புசெலுத்துகிறேன். நீயும் இவர்கள் மீது அன்பு செலுத்துவாயாக!'' என்றார்கள்.
7 மக்கா வெற்றியின் போது நபியவர்களுடன் கஃபாவினுல் நுழைந்தவர்
8 மக்கா வெற்றியின் போது இவரை நபிகளாரின் ஒட்டகத்தின் மேல் ஏற்றிச் சென்றார்கள்
9 ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறிய நேரத்தில் ஆயிஷா (ரலி)அவர்களிடத்தில் நாங்கள் நல்லதைத் தவிர வேறதையும் அறியமாட்டோம் என்றுசொன்னவர்.

10  இவருடைய வீட்டில் நபிகளாரின் மனைவி ஸபிய்யா (ரலி) அவர்கள் அறை இருந்தது
விடை 
உஸாமா பின் ஜைத் (ரலி)
1. ஆதாரம் புகாரி (3730)  2. ஆதாரம் புகாரி (3730)
3. ஆதாரம் புகாரி (3730)  4. ஆதாரம் புகாரி (4304)
5. ஆதாரம் புகாரி (2988)  6. ஆதாரம் புகாரி (6003)
7. ஆதாரம் புகாரி (2988)  8. ஆதாரம் புகாரி (2988)

9. ஆதாரம் புகாரி (2637)  10.ஆதாரம் புகாரி (2038)

யார் இவர்? - அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)

1. நபி (ஸல்) அவர்களால் சொர்க்கவாதி என்று சொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர்
2. உஹதுப்போரில் வீரமரணம் அடைந்த முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களின் நிலையை நினைவு கூறிய நபித்தோழர்.
3. அல்லாஹ்வின் தூதரின் மகன் மரணித்த போது நபியவர்களிடம் ஏன் அழுகிறீர்கள் என்று வினவிய நபித்தோழர்.
4. உமர் (ரலி) அவர்கள் மரணிக்கும் போது அடுத்த இறைநம்பிக்கையாளர்களின் தலைவர்களில் இவருடைய பெயரையும் கூறினார்கள்
5. உமர் (ரலி) அவர்கள் கடைசியாக செய்த ஹஜ்ஜின்போது நபிகளாரின் மனைவிகளுடன் இவரையும் அனுப்பி வைத்தார்கள்.
6. மக்காவில் இருந்து மதீனாவிற்கு நாடு துறந்து வந்தபோது இவரையும் சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள்
7. இந்த நபித்தோழர் சிரங்கு நோயினால் பீடிக்கப்பட்டபோது இவருக்கு பட்டாடை அணிய நபியவர்கள் அனுமதி கொடுத்தார்கள்
8. நபியவர்களின் ஒட்டகம் திருட்டுப்போய் விட்டது என்பதை இவரின் அடிமையின் மூலம்தான் தெரியவந்தது
9. இந்த நபித்தோழரின் கால்நடைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள்தன்னுடைய அடிமைக்கு எச்சரிக்கை செய்தார்கள்
10. நபி (ஸல்) அவர்களின் ஃபதக் பகுதியில் இருந்த சொத்துக்கள் தொடர்பாக பேச இவர் உமர் (ரலி) அவர்களிடம் அனுமதி வேண்டினார்கள்
 
விடை:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)
1. திர்மிதி 3680 2. புகாரி 1275
3. புகாரி 1303 4.புகாரி 1392
5. புகாரி 1860 6. புகாரி 2049
7. புகாரி 2919 8. புகாரி 3041
9. புகாரி 3059 10. புகாரி 3094